நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா தேவன்குறிச்சி கோமதி அம்பிகா சமேத அக்னீஸ்வர கோவில் உள்ளது. இந்தக் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை பவுர்ணமி கிரிவலம் ஊர்வலம் நடந்தது. 40 ஆண்டுகளுக்குப் பின் இந்தாண்டு கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலப் பாதை சீரமைக்கப்பட்டது. நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் சென்றனர்.

