/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 7 ஆண்டுகளில் ரூ.288 கோடிகளாக நிதி குறைப்பு
/
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 7 ஆண்டுகளில் ரூ.288 கோடிகளாக நிதி குறைப்பு
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 7 ஆண்டுகளில் ரூ.288 கோடிகளாக நிதி குறைப்பு
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 7 ஆண்டுகளில் ரூ.288 கோடிகளாக நிதி குறைப்பு
ADDED : மார் 05, 2026 06:55 AM

மதுரை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கு மத்திய அரசின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் நிதி, 7 ஆண்டுகளில் ரூ.1553 கோடியில் இருந்து ரூ.288 கோடிகளாக நிதி ஒதுக்கீடு செய்தது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய அரசு தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த நிதியாண்டுகளில் ஒதுக்கிய நிதி விபரங்கள் குறித்து மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டார்.
இதற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல ஆணையரகம் அளித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிறார் கார்த்திக்.
அவர் கூறியதாவது:
மத்திய அரசும் தன் பங்கிற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கி வருகிறது.
2014--2015 முதல் 2024--2025 வரையிலான 11 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்ணுற்று எட்டுக் கோடியே 82 லட்சம் வரை நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த 2018--2019ம் நிதியாண்டில் மட்டும் அதிகபட்சமாக ரூ.ஆயிரத்து ஐநுாற்று ஐம்பத்தி மூன்றுக் கோடியே 48 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் நிதிகள் குறைக்கப்பட்டு கடைசியாக 2024--2025ம் நிதியாண்டில் ரூ.288.84 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதிகபட்சமாக 2022--2023ம் நிதியாண்டில் ரூ.159.78 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. 2018--2019ம் நிதியாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 90 சதவீதம் நிதி குறைக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
இதன் மூலம் மத்திய அரசு தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களுக்கான நலத்திட்ட நிதி ஒதுக்கீட்டை அடியோடு புறக்கணித்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால் அம்மக்களுக்கான கல்வி, பொருளாதார மேம்பாடு முடக்கப்பட்டு, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இனியாவது ஆண்டுதோறும் ரூ.1500 கோடிகளுக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

