ADDED : மார் 27, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: தே.கல்லுப்பட்டியில் சுக்குமல்லி முருகன் 56, என்பவர் ஆதரவற்ற நிலையில் வசித்து வந்தார். டீ விற்பனை செய்த அவருக்கு உறவினர் யாரும் இல்லாத நிலையில் உடல்நலக்குறைவால் இறந்தார்.
அவரது உடலை அடக்கம் செய்ய ஆட்களில்லாத நிலையில், அங்குள்ள நண்பர்கள் வட்டாரம் உதவிட முன்வந்தது. இதையடுத்து அவருடன் படித்த நண்பரை அடையாளம் கண்டு, அமைப்பின் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் விஜயபார்த்திபன் ரூ.10 ஆயிரம் வழங்கி இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர்.
