/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கேலோ இந்தியா விளையாட்டு ஜன.8 விழிப்புணர்வு மாரத்தான்
/
கேலோ இந்தியா விளையாட்டு ஜன.8 விழிப்புணர்வு மாரத்தான்
கேலோ இந்தியா விளையாட்டு ஜன.8 விழிப்புணர்வு மாரத்தான்
கேலோ இந்தியா விளையாட்டு ஜன.8 விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : ஜன 06, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டின் கட்கா, கோகோ போட்டி, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜன.21 முதல் 30 வரை நடக்க உள்ளது.
இதையொட்டி ஜன. 8 காலை 6:30 மணிக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விழிப்புணர்வு மாரத்தான், காலை 7:00 மணிக்கு டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் அன்று காலை 6:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு வரவேண்டும்.
மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் அன்று மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கும் விழிப்புணர்வு விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.