ADDED : பிப் 26, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: பரவை பேரூராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி சிலை வளாகத்தில் அமைக்கப்பட்ட கூரையை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ திறந்து வைத்தார்.
பேரூராட்சி தலைவர் கலா மீனா தலைமை வகித்தார். அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜா, மாவட்ட அவைத் தலைவர் அண்ணாதுரை, முன்னாள் பாண்டியன் கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜா, முன்னாள் கவுன்சிலர் முத்துப்பாண்டி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயராஜ், முன்னாள் துணைத் தலைவர் சவுந்தரபாண்டி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஆதவன் வரவேற்றார்,
கவுன்சிலர்கள் சவுந்தரபாண்டி, கீதா, வின்சி, செபஸ்தியம்மாள், அலுவலகப் பணியாளர் வெங்கடேஷ், கட்சி நிர்வாகிகள் சரவணகுமார், மனோஜ்குமார், ராஜ்குமார் ராஜூ பங்கேற்றனர்.
