UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 04:45 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் காந்தி ஜெயந்தி விழா செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.
கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார் முன்னிலையில் காந்தி அஸ்தி பீடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கு துணைத் தலைவர் ஜவஹர் பாபு பரிசு வழங்கினார். செந்தமிழ்க்கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி ‘அறத்தின் மறுவடிவம் காந்தி’ எனும் தலைப்பில் பேசினார். அமைதிச் சங்க மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சங்கத்தலைவர் சரவணன், உதவி தலைமையாசிரியர் ஜான்சன் ஒருங்கிணைத்தனர். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் நன்றி கூறினார்.
