தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விநாயகர் சிலை ஊர்வலம்

 விநாயகர் சிலை ஊர்வலம்

 விநாயகர் சிலை ஊர்வலம்


ADDED : செப் 16, 2026 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எழுமலை: எழுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹிந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் சார்பில் எழுமலையை சுற்றியுள்ள கிராமங்களில் 15 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.

நேற்று மாலை இந்த சிலைகள் எழுமலை ராஜகணபதி கோயில் முன்பு கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். பாஜ., கல்வியாளர் அணி மாநில பொதுச்செயலாளர் கருணாநிதி, ஹிந்து முன்னணி மத்திய அரசு வக்கீல் முருகன், புறநகர் மாவட்ட துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, பா.ஜ., ஓ.பி.சி., அணி மதுரை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மாத்துாரான், ஹிந்து முன்னணி சேடபட்டி ஒன்றிய நிர்வாகிகள் தலைவர் லட்சுமணன், துணைத் தலைவர் மாசாணகருப்பையா, பொதுச் செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்று ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று எழுமலை பெரியகுளம் கண்மாயில் கரைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us