/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கப்பலுார் தொழிற் பேட்டையில் நுாதனமாக திருடும் கும்பல்
/
கப்பலுார் தொழிற் பேட்டையில் நுாதனமாக திருடும் கும்பல்
கப்பலுார் தொழிற் பேட்டையில் நுாதனமாக திருடும் கும்பல்
கப்பலுார் தொழிற் பேட்டையில் நுாதனமாக திருடும் கும்பல்
ADDED : ஜூலை 17, 2025 12:39 AM
திருமங்கலம்: கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையோடு இணைந்து ஆட்டோமொபைல் எஸ்டேட் உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இரும்பு தொடர்பான வேலைகள் நடக்கும்போது இந் நிறுவனங்களின் வாசல் அல்லது சுற்றுச்சுவர் இல்லாத இடங்களில் வைத்து வேலை பார்ப்பது வழக்கம்.
விடுமுறை நாட்கள், ஆட்கள் இல்லாத நேரங்களில் வெளியில் கிடக்கும் இரும்பு பொருட்களை சிலர் திருடிச் செல்கின்றனர். சில நாட்களுக்கு முன் ஒரு கம்பெனிக்கு வந்த நபர் ஆட்கள் இல்லாததை அறிந்து வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்து கிளைகளை உடைத்து கீழே போட்டுள்ளார். அதை எடுத்துச் செல்வது போல அங்கிருந்த இரும்பு பொருட்களை திருடிச் சென்றார். இதுகுறித்த வீடியோ பரவியது. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடு போகும் பொருளின் மதிப்பு குறைவாக இருப்பதால் உரிமையாளர்கள் புகார் செய்வது இல்லை. இதையடுத்து ஆட்டோமொபைல் எஸ்டேட் பகுதி பாதுகாப்புக்காக 'கேட்' அமைக்க தொழிற்சாலை உரிமையாளர்கள் முயற்சி எடுத்தனர். மாவட்ட தொழில் மைய அதிகாரிகளிடம் கேட்டபோது அனுமதி மறுத்துவிட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாததால் தொழிற்சாலை உரிமையாளர்கள் வளாகத்தில் உள்ள பொருட்களை பாதுகாக்க வழிதெரியாமல் தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.