sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வணிக கட்டடங்களுக்கான குப்பை வரி விதிப்பு;  நினைச்சாலே கண்ணை கட்டுது... பாதிப்பின்றி சீரமைக்க முன்வருமா மாநகராட்சி

/

வணிக கட்டடங்களுக்கான குப்பை வரி விதிப்பு;  நினைச்சாலே கண்ணை கட்டுது... பாதிப்பின்றி சீரமைக்க முன்வருமா மாநகராட்சி

வணிக கட்டடங்களுக்கான குப்பை வரி விதிப்பு;  நினைச்சாலே கண்ணை கட்டுது... பாதிப்பின்றி சீரமைக்க முன்வருமா மாநகராட்சி

வணிக கட்டடங்களுக்கான குப்பை வரி விதிப்பு;  நினைச்சாலே கண்ணை கட்டுது... பாதிப்பின்றி சீரமைக்க முன்வருமா மாநகராட்சி


ADDED : ஜன 20, 2026 07:07 AM

Google News

ADDED : ஜன 20, 2026 07:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதி வணிக கட்டடங்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு குப்பை வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிப்படி மாநகராட்சி பகுதி குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.50 வீதமும், வணிகக் கட்டடங்களுக்கு ரூ.500 வீதமும் குப்பை வரி விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மதுரையில் ரூ.500 வரை வீட்டுவரி செலுத்தும் குடியிருப்புக்கு ரூ.60, ரூ.501 முதல் ரூ.1000 வரிசெலுத்தும் குடியிருப்புகளுக்கு ரூ.120, ரூ. 1,500 வரை வரி செலுத்தும் குடியிருப்புகளுக்கு ரூ.180 எனவும், ரூ.1500க்கு மேல் வீட்டு வரியுள்ள குடியிருப்புகளுக்கு ரூ.300 என ஆறு மாதங்களுக்கான குப்பை வரி நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் வணிக கட்டடங்களுக்கு 'கண்ணை கட்டும்' அளவுக்கு மாதம் ரூ.100ல் இருந்து அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரை குப்பை வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கு முரணாக உள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் தரைத்தளம் வணிகத்திற்காகவும், முதல்தளம் குடியிருப்பாகவும் உள்ள கட்டடங்களுக்கு, மொத்தமாகவே வணிக கட்டடங்களுக்கான வரி நிர்ணயிக்கப்படுகிறது. வாடகைதாரர் பெயரில் தொழில்வரி விதிப்பதில்லை. வணிக வரிக்கு ஏற்ப கட்டட உரிமையாளர்களுக்கு குப்பை வரியும் ரூ. ஆயிரக்கணக்கில் விதிக்கப்படுகிறது.

மாநகராட்சி வருவாய்ப் பிரிவு முன்னாள் கவுரவ ஆலோசகர் தேசிகாசாரி கூறியதாவது: மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் ஒன்றரை லட்சம் வணிகக் கட்டடங்களுக்கு முறையான குப்பை வரி நிர்ணயம் செய்யப்படவில்லை. இதை சீரமைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.ஆயிரத்திற்குள் வரை குப்பை வரி நிர்ணயம் செய்யும் வகையில் சீரமைக்க வேண்டும்.

மாநகராட்சியில் விரிவாக்க வார்டுகளில் புதிய பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தி அன்றே இணைப்பு வழங்க கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுத்தார். அதுபோல் குப்பை வரியை சீரமைத்தால், நிலுவையில் உள்ள ரூ. பல லட்சம் வரியை மக்கள் தாமாக முன்வந்து செலுத்தும் சூழல் ஏற்படும். அப்போது வருவாய் அதிகரிக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us