நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாதாந்திரப் பொதுக்குழுக் கூட்டம் துணைத் தலைவர் குணவதி, தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. பேராசிரியர் ஆனந்தன் வரவேற்றார். செயலாளர் பெரியதம்பி, புரவலர் பார்த்தசாரதி, மாநில பொதுச் செயலாளர் மனோகரன், பொருளாளர் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், ராஜேந்திரன், அரவிந்த், லட்சுமணன், சந்திரன், சுப்ரமணி, செந்தில் செய்திருந்தனர்.
பல்கலை திருத்தச்சட்டத்தை கல்வியாளர், மாணவர்கள் எதிர்ப்பை தொடர்ந்து தற்காலிகமாக அரசு நிறுத்தியுள்ளது. உதவிபெறும் கல்லுாரிகளில் குறைந்த கட்டணத்தில் கல்விபயிலும் மாணவர் நலன்கருதி அச்சட்டத்தை அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

