ADDED : மார் 21, 2026 07:17 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் கூத்தப்பன்பட்டியில் ஹிந்து மகாசபா பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வெள்ளைத்தம்பி தலைமையில் நடந்தது. செயலாளர் சங்கன், துணைத் தலைவர் தெய்வேந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் செல்லத்துரை, விவசாய அணி செயலாளர் ரமேஷ் பாண்டியன் பேசினர்.
நா.பெருமாள்பட்டியில் விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கிய இடத்தை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாத தி.மு.க., அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலுகா தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.
