ADDED : ஆக 01, 2026 02:55 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: ஊர்மெச்சிகுளத்தில் நாடார் உறவின்முறை சங்கப் பொதுக்குழு தணிக்கை கூட்டம் நடந்தது. தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கல்யாண சுந்தரம் நடப்பாண்டு வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.
அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
6ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்குதல், புதிய உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிர்வாகி பொன்ராஜ் நன்றி கூறினார்.
