தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பொதுக்குழுக்கூட்டம்

பொதுக்குழுக்கூட்டம்

பொதுக்குழுக்கூட்டம்


ADDED : ஆக 12, 2026 05:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் அரசுப் பணியாளர் சங்கத்தில், பல்நோக்கு மருத்துவப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் நடந்தது.

பல்நோக்கு மருத்துவ பணியாளருக்கு பணிவரன்முறையை தாமதமின்றி விரைவாக செயல்படுத்த வேண்டும். சீருடையை நிர்ணயம் செய்வதுடன், அதற்கான சீருடைப்படி, சலவைப்படியை வழங்கவும் வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பெண்கள், உடல்நல குறைவானவர்கள் பாதிக்காத வகையில் மாவட்டம் தோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதாரநிலைய வட்டாரத்தில் அந்தந்த மாத ஊதியத்தை அந்த மாத இறுதியிலேயே வழங்க வேண்டும். காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாவட்ட தலைவராக சுசீந்திரகுமார், செயலாளராக தனசேகரபாண்டியன், பொருளாளராக சுரேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டனர். துணைத்தலைவர்களாக ராமச்சந்திரன், மாயகிருஷ்ணன், சுமதி, கார்த்திகை செல்வியும், இணைச் செயலாளராக புஷ்பம், பாண்டிப்பிரியா, நாகலட்சுமி, விக்னேஷ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us