ADDED : அக் 19, 2025 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் தீபாவளியை முன்னிட்டு நேற்று சிறப்பு சந்தை நடந்தது. மேலுார் தாலுகாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
ஆடு கிலோ ரூ.800 முதல் ரூ.ஆயிரம் வரை விற்றது. பத்து கிலோ முதல் 20 கிலோ வரை எடை கொண்ட ஆடுகள் ரூ.பத்தாயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்து. நேற்று நடந்த சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.