ADDED : மார் 17, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கால்நடை சந்தை நடந்தது. தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை கொண்டு வந்தனர்.
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்ததால் கிலோ ரூ.800 முதல் ரூ. 900 வரை ஆட்டின் எடைக்கு தகுந்தாற் போல் விற்றது. நேற்று ஒரே நாளில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
