ADDED : அக் 19, 2026 05:35 PM
மதுரை: பேரையூர் பகுதியில் நேற்று முன்தினம் 33 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு முன் துவங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் அவ்வப்போது மேகம் திரள்வதும், வெயில் குறைந்து இருட்டாவதுமாக உள்ளது. அவ்வப்போது மாலை வேளையில் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் மேகம் திரண்டு இருண்டாலும் இதோ... அதோ என மழை போக்குக் காட்டியது.
நேற்று முன்தினமும் இதே நிலை இருந்தாலும் பேரையூரில் மட்டும் மழை பெய்துள்ளது. இதன்படி மாவட்டத்தில் 22 இடங்களில் மழை மானி இருந்தாலும் பேரையூர் (33 மி.மீ.,), எழுமலை (3.8 மி.மீ.,), கள்ளிக்குடி (16.4 மி.மீ.,) மட்டுமே மழை பதிவாகியுள்ளது.
நீர்மட்டம் விவரம்:
பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.70 அடி. (மொத்த உயரம் 152 அடி), அணையில் 2033 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 405 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 400 மி.மீ., கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 44.32 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையில் 1334 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 442 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 86 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
