ADDED : பிப் 16, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் - டி.கல்லுப்பட்டி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பராமரிப்பின்றி அடிக்கடி பழுதாகி நிற்பதால் பயணிகள் பரிதவிக்கின்றனர்.
டி.கல்லுப்பட்டி பணிமனையில் இருந்து 40க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை போதிய பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே பழுதாகி நிற்கின்றன. அதேபோல் தேனி, ராஜபாளையம், தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் அடிக்கடி பழுதடைகின்றன. புதிய மஞ்சள் நிற பஸ்களும் அடிக்கடி பழுதடைந்து நடு வழியில் நிற்பதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
