/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நடவடிக்கை எடுக்கும் வரை புறக்கணிப்பு தொடரும் அரசு டாக்டர்கள் சங்கம் தீர்மானம்

ADDED : மே 29, 2025 01:48 AM
மதுரை: 'மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன் மீதான பொது சுகாதாரப்பிரிவு இணை இயக்குநர் விசாரணையில் நடவடிக்கை எடுக்கும் வரை, அவரிடம் தகவல் தெரிவிப்பதை புறக்கணிக்கப் போவதாக' தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சுகாதார அலுவலர் குமரகுருபரன், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், டாக்டர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்திலும், பொது சுகாதார இயக்குநரிடமும் டாக்டர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக இணை இயக்குநர் செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.
அதன் முடிவுகள் தெரியும் வரை, குமரகுருபரனிடம் தகவல் தெரிவிக்கும் பணியை புறக்கணிக்கப்போவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க மாநிலத் தலைவர் செந்தில், பொது சுகாதார பிரிவு செயலாளர் விஸ்வநாத பிரபு கூறுகையில், 'மாவட்ட சுகாதார அலுவலர் நடத்தும் அனைத்து கூட்டங்களையும் புறக்கணிப்பது, அலுவலக வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து வெளியேறுவது, அவரது அழைப்பு, மெசேஜ்களை தவிர்ப்பது என முடிவு செய்துள்ளோம்.
நிர்வாக பணிகளை மாவட்டத்தில் இருந்து சர்குலராக பெற்று செயல்படுத்துவோம். இதனால் நோயாளிகளுக்கோ, பொதுமக்களுக்கோ பாதிப்பு ஏற்படாது' என்றனர்.