ADDED : அக் 20, 2024 05:49 AM

மதுரை : மதுரையில் அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் நீதிராஜா தலைமை வகித்தார்.
அரசு ஊழியர்களின் முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உரிமைகளை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்களின் சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு துறை காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். ஏற்கனவே உள்ள 25 சதவீத கருணை அடிப்படையிலான பணியிடத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
தலைவராக நீதிராஜா, செயலாளராக சந்திரபோஸ், பொருளாளராக பரமசிவன், துணைத்தலைவர்களாக மூர்த்தி, மகேந்திரன், சந்திரபாண்டி, மனோகரன், இணைச்செயலாளர்களாக பாண்டிச்செல்வி, பெரியகருப்பன், ராம்குமார், சுஜாதா, தணிக்கையாளர்களாக சிவகுரும்பன், முத்துவேல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.