ADDED : ஜன 01, 2024 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்; சுதந்திர போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி திருமங்கலத்தில் உள்ள மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவு சிலைக்கு ஆர்.டி.ஓ., சாந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தாசில்தார் மனேஷ்குமார், வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
எம்.எஸ்.கே., டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி அன்பானந்தம், நிறுவனர் மாதவன், நிர்வாகிகள் கருணாகரன், மாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.