ADDED : பிப் 27, 2024 08:23 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரையில் தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் சார்பில் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பதவி உயர்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்கு உதவியாளர் நிலையில், பணியேற்ற நாள் அடிப்படையில் முதுநிலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறையில் தெளிவுரை கோரிப் பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சங்கு, கண்ணன், ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
