/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் ஆலோசனை
/
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் ஆலோசனை
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் ஆலோசனை
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் ஆலோசனை
ADDED : நவ 26, 2024 11:45 PM

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள், சென்னையில் டிச.,17 ம் தேதி அரை நிர்வாண போராட்டம் நடத்த உள்ளனர்.
இதுகுறித்த ஆலோசனை கூட்டம், மதுரையில் இன்று(நவ.,26) நடந்தது. இதில், மதுரை, காரைக்குடி, விருதுநகர், திண்டுக்கல், மற்றும் தேனி மாவட்டங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு, ஓய்வு நல மீட்பு சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் பாண்டி, தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் கதிரேசன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 107 மாதங்களாக நிறுத்தம் செய்யப்பட்ட அகவிலைப்படி உயர்வை, நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும்; ஏப்.,2023 முதல் அக்.,2024 வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களின், ஓய்வு கால பணப்பலன்களை வழங்க வேண்டும்; பஸ் ஊழியர்களுக்கு, இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 2003ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.