ADDED : மார் 01, 2024 06:36 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் இந்தாண்டில் திரட்டப்பட்ட நன்கொடை தொகைக்கு தமிழக அரசு வழங்கும் இணை மானியத் தொகை, விலையில்லா தையல் இயந்திரம் என 137 பேருக்கு ரூ.20.8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ்குமார், முஸ்லிம் மகளிர் உதவும் சங்க செயலாளர் முகமதுகான், இணைச் செயலாளர் ேஷக்அப்துல்காதர், ரெஹானா பேகம், உறுப்பினர்கள் ஜாபர் சாதிக், தில்ஷாத் பங்கேற்றனர்.
