/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழகத்தில் பாலியல் குற்றம் அதிகரித்ததே அரசின் சாதனை; மதுரையில் வாசன் குற்றச்சாட்டு

ADDED : அக் 13, 2025 03:52 AM
அவனியாபுரம், : ''தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் 51 சதவீதம் அதிகரித்துள்ளதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை'' என த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணையில்தான் உண்மையை வெளியில் கொண்டுவர முடியும்.
இருமல் மருந்து விவகாரத்தில் குழந்தைகளின் இறப்பு தமிழகத்திற்கு மிகப்பெரிய தலை குனிவு.மூன்று ஆண்டுகளில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் 51 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவடுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க., இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. திருமாவளவன் பிரச்னையில் அனைவருக்கும் சட்டம் பொதுவானது என்றார்.