/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரதமர் தலைமையில் வளர்ச்சி பெறும்; இந்தியா பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி நம்பிக்கை
/
பிரதமர் தலைமையில் வளர்ச்சி பெறும்; இந்தியா பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி நம்பிக்கை
பிரதமர் தலைமையில் வளர்ச்சி பெறும்; இந்தியா பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி நம்பிக்கை
பிரதமர் தலைமையில் வளர்ச்சி பெறும்; இந்தியா பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி நம்பிக்கை
ADDED : செப் 29, 2024 07:22 AM

மதுரை : ''பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி பெறுகிறது. நம்மை முன்னோக்கி கொண்டு செல்கிறார்'' என மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த 12வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
முதல்வர் அல்லி வரவேற்றார். கல்லுாரித் தலைவர் முத்துராமலிங்கம் பேசுகையில், ''மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை தருபவர்களாக மாற வேண்டும். நோக்கம் எதுவென்று தீர்மானித்து இலக்கை நோக்கி பயணம் செய்தால் வெற்றி நிச்சயம்'' என்றார். டீன் சண்முகலதா நன்றி கூறினார்.
454 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவர்னர் பேசியதாவது: 40 ஆண்டுகளை கடந்து கல்வி சேவை வழங்கிக் கொண்டிருக்கும் கல்லுாரித் தலைவரின் முயற்சிக்கு வாழ்த்துகள். மாணவர்கள் கனவுகளுடன் வாழ்ந்தால் அதுவே உங்களை வழிநடத்திச் செல்லும்.
மாணவர்களாகிய உங்கள் மூலம் தேசத்தின் எதிர்காலத்தைப் பார்க்கிறேன். தேசத்தின் சொத்து நீங்கள். அடுத்தது என்னவென்று முடிவெடுப்பதில் தெளிவாக இருங்கள். கனவுகளை சிறிதாக்காதீர்கள்.
இந்தியாவில் தற்போதைய வளர்ச்சி என்பது உலகளவில் வியத்தக ஒன்றாக உள்ளது. இந்தியா சுதந்திரமடைந்த காலகட்டத்தில் உலகளவில் 6வது வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக இருந்தது. அப்போதைய தலைவர்களுக்கு ஒரு கனவு இருந்தது. அந்த தலைமை சரியான பாதையை நோக்கி செல்லவில்லை.
அதனால் அடுத்து வந்த ஆண்டுகளில் நாம் 11வது இடத்திற்கு சென்றோம். பள்ளிகள், மருத்துவமனை, ரோடு, மின்வசதி எல்லாம் செய்தாலும் பிரச்னைகள் தீர்ந்த நிலையில்லை.
இதே காலகட்டத்தில் சுதந்திரமடைந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் இந்தியா எப்படி வளர்கிறது என்ற எதிர்பார்ப்போடு கவனித்தனர். துரதிர்ஷ்டவசமாக எதிர்பார்த்த அளவு வளர்ச்சியடையவில்லை.
பத்தாண்டுகளுக்கு முன்பாக தொலைநோக்கு பார்வையுள்ள பிரதமர் இந்தியாவிற்கு கிடைத்தார். தேசத்தின் பிரச்னைகளை சமரசமின்றி தெய்வீகத்தன்மையுடன் நம்பிக்கையுடன் முன்னெடுத்தார்.
அவரது தலைமையில் தேசம் வளர்ச்சி பாதையில் செல்கிறது. இன்று வேகமாக வளரும் பொருளாதார நாடாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக இந்தியா உள்ளது என்றார்.