/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விசாகா கமிட்டி விசாரணையில் தொய்வு; அரசுப் பணியாளர் சங்கம் குமுறல்
/
விசாகா கமிட்டி விசாரணையில் தொய்வு; அரசுப் பணியாளர் சங்கம் குமுறல்
விசாகா கமிட்டி விசாரணையில் தொய்வு; அரசுப் பணியாளர் சங்கம் குமுறல்
விசாகா கமிட்டி விசாரணையில் தொய்வு; அரசுப் பணியாளர் சங்கம் குமுறல்
ADDED : அக் 06, 2024 03:59 AM

மதுரை : ''தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களை விசாரிக்க வேண்டிய விசாகா கமிட்டி சரியாக செயல்படவில்லை'' என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மதுரை மாவட்ட தலைவர் ஜெயகணேஷ் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: பெண் ஊழியரை தொட்டுப் பேசுவது முதல் அதிகாரத்தை வைத்து மிரட்டுவது வரை பாலியல் தொல்லைகளாக விசாகா கமிட்டியின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. விசாகா கமிட்டி தலைவராக பெண் அதிகாரியும், உறுப்பினர்களில் 50 சதவீதம் பெண்களாகவும், தன்னார்வ தொண்டு அமைப்பை சேர்ந்தவர் உறுப்பினராகவும் இருக்க வேண்டும். இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் கமிட்டியே செயல்படவில்லை. நேர்மையாக செயல்படும் பெண் ஊழியர்கள் மேலதிகாரிகளின் துன்புறுத்தலுக்கு ஒத்துழைக்காவிட்டால் பணிமாறுதல் செய்யப்படுகின்றனர். கூடுதல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அதேபோல செல்வாக்கை பயன்படுத்தி ஒரே இடத்தில் ஆண்டுக்கணக்கில் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். நேர்மையானவர்கள் ஒரே ஆண்டில் பல இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். சீனியாரிட்டி இருந்தாலும் பணியிட மாறுதலுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை. இவற்றை தமிழக அரசு சரிசெய்ய வேண்டும் என்றார்.