/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போத்தம்பட்டி கண்மாயில் கிராவல் மண்ணை அள்ளுறாங்க பிடிங்க: விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
/
போத்தம்பட்டி கண்மாயில் கிராவல் மண்ணை அள்ளுறாங்க பிடிங்க: விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
போத்தம்பட்டி கண்மாயில் கிராவல் மண்ணை அள்ளுறாங்க பிடிங்க: விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
போத்தம்பட்டி கண்மாயில் கிராவல் மண்ணை அள்ளுறாங்க பிடிங்க: விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
ADDED : செப் 21, 2024 05:49 AM

மதுரையில் கலெக்டர்சங்கீதா தலைமையில் நடந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சக்திவேல், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் ராணி பங்கேற்றனர்.
மதுரை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பிப்பது குறைவாக உள்ளது. செப். 30 கடைசி தேதி என கலெக்டர் சங்கீதா தெரிவித்தார்.
உடனே கூட்டமாக எழுந்த விவசாயிகள், 'பயிர்களுக்கு காப்பீட்டுத்தொகை அதிகமாக செலுத்துகிறோம். இழப்பீடு குறைவாக கிடைக்கிறது. மக்காச்சோளத்திற்கு இழப்பீடு ரூ.50 தான் தந்தனர். தனியார் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு பதிலாக அரசே காப்பீட்டுக்கு உதவவேண்டும்' என்றனர்.
உசிலம்பட்டி விவசாயிகள் கூறுகையில், 'போத்தம்பட்டி கண்மாயில் வண்டல்மண் (கரம்பை) அள்ளுவதற்கு பதிலாக வெளியாட்கள் கிராவல் மண் அள்ளுகின்றனர். அதுவும் நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதிக்காத இடத்தில் மண் எடுக்கின்றனர். அதை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. மாறாக விவசாயிகளை அனுமதிக்க மறுக்கின்றனர்'' என்றனர்.
கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, குலமங்கலம், கருவனுார் பகுதிகளில் கோயில் மாடுகளும், வளர்ப்பு மாடுகளும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. நாற்று நட்ட நிலையில் நாற்றுகளை மேய்ந்து இழப்பை ஏற்படுத்துகின்றன. யாரிடம் முறையிட்டாலும் தீர்வு கிடைப்பதில்லை'' என்றனர்.
வழக்கம்போல மேலுார் பகுதி வாய்க்கால், கண்மாய்பிரச்னை, தண்ணீர் வரத்து குறைவு குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கலெக்டர் சங்கீதா பேசியதாவது:
பயிர்களுக்கு காப்பீடு என்பது மாநிலம் முழுவதற்குமான ஒரே திட்டம். அரசே நடத்துவது என்பது கொள்கை முடிவு. உங்களது கோரிக்கைகள் அரசிடம் பரிந்துரைக்கப்படும். விவசாயிகள் அல்லாத தனிநபர்கள் கண்மாய்களில் மண் அள்ளுவதாக புகார் வந்தால் அந்த கண்மாய்க்கான பொறுப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
போத்தம்பட்டி கண்மாயில் மணல் அள்ளிய நபரிடம் அபராதம் விதித்து போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம கோயில்களாக இருந்தால் மாடுகளை நேர்த்திக்கடனாக விடுவது குறித்து பிரிவு 133 மூலம் தடை செய்ய ஏற்பாடு செய்யலாம். வளர்ப்பு மாடுகளாகஇருந்தால் அதிகாரிகள்அவற்றை பிடித்து வைத்து அபராதம் விதிக்கவேண்டும் என்றார்.