/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோழவந்தான், திருமங்கலம் பகுதிகளில் கிராம சபை கூட்டம்
/
சோழவந்தான், திருமங்கலம் பகுதிகளில் கிராம சபை கூட்டம்
சோழவந்தான், திருமங்கலம் பகுதிகளில் கிராம சபை கூட்டம்
சோழவந்தான், திருமங்கலம் பகுதிகளில் கிராம சபை கூட்டம்
ADDED : நவ 02, 2025 04:15 AM
சோழவந்தான்: சோழவந்தான் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
விக்கிரமங்கலத்தில் செயலாளர் தனபாண்டியன் தீர்மானம் வாசித்தார். பற்றாளராக உதவியாளர் சங்கர் பங்கேற்றார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய்களை தயார் செய்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குருவித்துறையில் செயலாளர் மனோபாரதி தீர்மானம் வாசித்தார். பற்றாளராக ரோடு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பங்கேற்றார். பருவ கால காய்ச்சல் வருவதை முன்னிட்டு டெங்கு ஒழிப்பு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னாடிமங்கலத்தில் செயலாளர் திருச்செந்தில் தீர்மானம் வாசித்தார். பற்றாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முருகேஸ்வரி பங்கேற்றார். வி.ஏ.ஓ., வெங்கடேசன், ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி கலந்து கொண்டனர். ஆதிதிராவிடர் காலனியில்யில் 'பேவர்பிளாக்' கற்கள் அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேனுாரில் செயலாளர் ஸ்ரீதர் தீர்மானம் வாசித்தார்.
பற்றாளராக ரோடு இன்ஸ்பெக்டர் நவீன் பங்கேற்றார். தேனுார் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அகற்றுதல், டபேதார் சந்தை, கட்டப்புளி நகரில் புகையிலை பொருட்கள் விற்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரிஷபத்தில் செயலாளர் முத்துவேலம்மாள் தீர்மானம் வாசித்தார். பற்றாளராக உதவியாளர் கீதா பங்கேற்றார். ஜெர்மேன் நகரில் குடிநீர் பைப்லைன் விரிவாக்கம் செய்தல் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்கரையில் செயலாளர் முனியராஜ் தீர்மானம் வாசித்தார். பற்றாளராக உதவியாளர் திருப்பதி பங்கேற்றார். சாக்கடை வசதி, குடிநீர் தொட்டி அமைத்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எரவார்பட்டியில் செயலாளர் பால்பாண்டி தீர்மானம் வாசித்தார். பற்றாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கருப்பையா பங்கேற்றார். உதவி வேளாண் அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டார். மழைநீர் சேகரிப்பு, டெங்கு ஒழிப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருமங்கலம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஆலம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
ராயபாளையம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் கவுசல்யா முன்னிலை வகித்தார். துாய்மை பணியாளர்களின் ஒருங்கிணைப்பாளர் செல்வி சுகாதார விழிப்புணர்வு குறித்து பேசினார். புதுப்பட்டியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் தாமரைச்செல்வி முன்னிலை வகித்தார். புகையில்லா கிராமம் என பெயர் ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

