/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேய்ச்சல் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
மேய்ச்சல் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : நவ 20, 2024 04:54 AM
மதுரை : மதுரை தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் உடன் தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
மேனேஜ்மென்ட் இயக்குனர் முரளி சாம்பசிவன், பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார், மஞ்சுளா, செந்தில், தொழுவம் தலைமை செயல் அதிகாரி சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டனர். தொழுவம் மேய்ச்சலிய செயற்பாட்டாளர் கபிலன் கூறியதாவது:
உலகளவில் மேய்ச்சலியத்தின் முக்கியத்துவம் கருதி ஐக்கிய நாடுகள் சபை 2026 ஐ சர்வதேச மேய்ச்சல் நிலம் மற்றும் கிடைக்காரர்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு மேய்ச்சலியம் சார்ந்த வாழ்வியலை உயிர்ப்புடன் வைப்பதன் மூலம் இயற்கை வழி வேளாண்மை, பல்லுயிர் சமநிலை, வளிமண்டல கார்பன் குறைப்பு சாத்தியமாகும்.
தொழுவத்தின் பசுமை பொருளாதாரம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு நவீன முறையில் சந்தைபடுத்தவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். மேய்ச்சலில் ஈடுபடுவோர் வாழ்வு மேம்படவும், புதிய தொழில்முனைவோர்கள் உருவாகவும் இந்த ஒப்பந்தம் பயன்படும் என்றார்.

