ADDED : ஏப் 22, 2026 05:53 PM

அ நிறம் | அளவு
திருநகர்: திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மாதிரி வாக்குச் சாவடியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் வாசல் முன்பு தோரணங்கள் வாழை மரங்கள் கட்டப்பட்டுள்ளன. உள்ளே செல்லும் வழியில் பச்சை நிற தரை விரிப்பு விரித்து, மேல் பகுதியில் பனை ஓலைகளால் கட்டப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி முழுவதும் எங்கு பார்த்தாலும் பசுமைச் சூழலுடன் உள்ளது. தொட்டிகளில் அலங்கார செடிகள், அவற்றைச் சுற்றிலும் பச்சை நிற வலைகள் கட்டப்பட்டுள்ளது.
ஓட்டளிக்கும் இடத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வைத்துள்ள மேடை பச்சை நிற துணிகள், தோரணங்களாள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிக்குள் பல இடங்களில் ஓட்டளிப்பது சம்பந்தமான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.
