நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகராட்சி பள்ளிகள் சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் கீழக்குயில்குடி சமணர் படுகை பகுதியை பார்வையிட்டு பசுமை நடைப்பயணம் மேற்கொண்டனர்.
கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்ச்சியில் 170 மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். கல்விக் குழு தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் சவுந்திரராஜன், மாநகராட்சி கல்விப் பிரிவு கண்காணிப்பாளர் வீரபாலமுருகன், பசுமை நடைப்பயண ஒருங்கிணைப்பாளர்கள் முத்துகிருஷ்ணன், சுந்தர், ரகுநாத், தலைமையாசிரியர்கள் உமா மகேஸ்வரி, தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.