ADDED : ஜூலை 19, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தானில் 'உங்களுடன் ஸ்டாலின்' மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் தொடங்கி வைத்தார். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், செயல் அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ், ஈஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
13 துறைகள் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்பட்டன. 45 நாட்களில் மனுக்களின் மீது தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.