/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் புதிய மத்திய சிறைக்கு இன்று பூமி பூஜை
/
மதுரையில் புதிய மத்திய சிறைக்கு இன்று பூமி பூஜை
ADDED : ஜூலை 29, 2025 01:34 AM
மதுரை: மதுரை மத்திய சிறை மேலுார் அருகே செம்பூருக்கு இடம் மாற்றப்பட உள்ள நிலையில், கட்டு மானத்திற்கான பூமி பூஜை இன்று(ஜூலை 29) நடக்கிறது.
மதுரை அரசரடி அருகே இடநெருக்கடியான 31 ஏக்கரில் மத்திய சிறையும், பெண்கள் சிறையும் உள்ளது. 1700க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நகருக்குள் இருப்பதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதை தவிர்க்க புழல் சிறை போல் புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்திற்கு மதுரை சிறையை மாற்ற வேண்டும் என தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக மேலுார் நான்குவழிச்சாலை அருகே செம்பூரில் 86 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ரூ.336 கோடியில் கட்டுமான பணியை காவலர் வீட்டு வசதி கழகம் மேற்கொள்கிறது. இதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை கட்டுமானத்திற்கான பூமி பூஜை நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் காணொலியில் துவக்கி வைக்கிறார். புழல் சிறை போன்று மதுரை சிறை வடிவமைக்கப் பட உள்ளது.