ADDED : செப் 21, 2026 01:32 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரையை சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் நாராயணன் கண்களை கட்டிக்கொண்டு 30 வினாடிகளில் 29 எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்கு முன் 24 கான்கிரீட் கற்களை உடைத்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த முயற்சி பதிவு செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
பயிற்சியாளர் நாராயணன் டேக்வாண்டோ தற்காப்பு கலையில் இதுவரை 39 கின்னஸ் உலக சாதனைகள் படைத்துள்ளார்.
