sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி...

/

மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி...

மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி...

மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி...


ADDED : ஆக 31, 2025 07:21 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிறந்தது குஜராத் மாநிலம் சூரத், அப்பா ஆனந்த், அம்மா அமிர்தா, சகோதரி திவ்யா. இதுதான் இவரது குடும்பம். வேலைக்காக இக்குடும்பம் கேரளா குடிபெயர்ந்தது. பள்ளிப் படிப்பை மலையாள தேசத்தில் முடித்த சரண்யாவுக்கு 10ம் வகுப்பு படிக்கும் போதே கார் விளம்பரத்திற்காக மாடலிங் செய்யும் வாய்ப்பு கிட்டியது. அந்த விளம்பரம் அடுத்தடுத்து பல்வேறு நிறுவன விளம்பரபடங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.

பள்ளி படிப்பை முடித்த கையுடன் மங்களூருவில் நர்சிங் பயின்றார். ஆனாலும் சரண்யாவின் மனமோ நர்சிங் தவிர்த்து 'ஆக்டிங்' மீதிருந்தது. காரணம் சிறியவயதில் பார்த்த தமிழ் சினிமாக்கள் தானாம். எப்படியும் நடிகையாக வேண்டும் என தீர்மானித்த சரண்யாவிற்கு சினிமா வாய்ப்பு தேடுவது சவாலாகவே இருந்தது.

2013ல் 'ஆமென்' படத்தில் நடன இயக்குனராக பணிபுரிந்தார். பட வாய்ப்புகளை தேடி வந்த அவர் 2017ல் 1971 பியாட் பார்டர் படத்தின் மூலம் நடிகையானார். தொடர்ந்து அச்சயன்ஸ், கப்புசினோ, சாணக்ய தந்திரம், ஏ பார் ஆப்பிள், மாமாங்கம், ஆகாச கங்கா என படங்கள் மூலம் மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையிலும் கால் பதித்தார். மலையாள சீரியலில் நடித்த நெகடிவ் கேரக்டர் இவரை ரீச் ஆக வைத்தது. பிக் பாஸ் மலையாளம் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்ற சரண்யா 62 வது நாளில் வெளியேறி ரசிகர்களை கிறங்கடித்தார். 1971 பியான்ட் பார்டர், கருடன் போன்ற மலையாள படங்கள் இவரை மலையாள தேசம் முழுதும் கொண்டு சென்ற நிலையில் வியூகம் என்ற படம் மூலம் தமிழ், பிரேமலு மாரி என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்தார்.

இன்ஸ்டாவில் இவருக்கு 3 லட்சம் 'பாலோவர்ஸ்' உள்ளனர்.

இவரிடம் பேசியதிலிருந்து...

நான் நடிப்பிற்கு வரக்காரணமே தமிழ் திரைப்படங்கள் தான். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் நடித்த தமிழ் சினிமாக்களை கேரளாவில் ரசித்து பார்க்கின்றனர். இதுவும் நான் தமிழில் வாய்ப்பு தேடுவதற்கு ஒரு காரணம். வாய்ப்பு கிடைத்தால் தமிழில் ஒரு ரவுண்ட் வருவேன்.

என் 'பேவரைட் ஆக்டர்' ரஜினி தான். நயன்தாராவை ரொம்ப பிடிக்கும்.

சிலருக்கு வேண்டுமானால் ஆக்டிங் பேஷனாக இருக்கலாம். எனக்கு ஆக்டிங் தான் லைப். மலையாள சினிமாவை பொருத்தவரை பெண்கள் பப்ளிமாஸ் போல, பப்பாளி பழமாக குண்டாக இருக்க வேண்டும். தமிழ் சினிமா அதற்கு நேர் எதிர். ஸ்லிமாக இருந்தால் தான் இங்கு வாய்ப்பு. இதற்காகவே உடம்பை அவ்வப்போது ஏற்ற இறக்கம் செய்து கொண்டிருக்கிறேன்.

இதற்காக தினமும் ஜிம் சென்று விடுவேன். அப்புறம் கொஞ்ச நேரம் யோகா. இதுதான் என் பிட்னஸ் ரகசியம். தென்னிந்திய உணவுகள் பிடிக்கும் என்றாலும் தமிழகத்தின் தயிர்சாதம் தான் என் பேவரைட். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் பாட்டு கேட்கவும், புத்தகங்கள் படிக்கவும் பிடிக்கும். ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் எனக்கு அத்துப்பிடி. தொடர்ந்து நடித்து கொண்டே இருக்க வேணடும் என்பது தான் என் ஆசை என்றார்.






      Dinamalar
      Follow us