ADDED : ஜன 14, 2025 11:12 PM

மதுரை; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கபடி, டேபிள் டென்னிஸ், உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் துவங்கின.
இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கிய நிலையில் பார்வையாளர் காலரி இடத்தில் கபடி, டேபிள் டென்னிஸ் அரங்குகளும், ஜிம்னாஸ்டிக் அரங்கையொட்டி உடற்பயிற்சி கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தரைத்தள கான்கிரீட் கட்டுமான பணி துவங்கியுள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 3 டென்னிஸ் அரங்கு, 2 கூடைப்பந்து அரங்குகளின் தரைத்தளம் இந்நிதியில் சீரமைக்கப்பட உள்ளது.
தற்போது ரூ.8.24 கோடி மதிப்பில் 400 மீட்டர் செயற்கை தடகள டிராக் அமைப்பதற்கான தார் பூசும் பணி நிறைவடைந்துள்ளது.
அடுத்ததாக மூன்றடுக்காக செயற்கை ரப்பர் துகள்கள் பூசும் பணி நடைபெறும். இப்பணி முடிந்த பின் டிராக்கின் உட்புறத்தில் இயற்கை புல்தரையால் ஆன கால்பந்து அரங்குக்கான புல் நடவுப்பணிகள் துவங்கும்.