ADDED : மார் 12, 2026 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தென் மாவட்ட ஜிம்னாஸ்டிக் போட்டி மதுரை சித்து மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
முதல்வர் தேவசேனா துவக்கி வைத்தார். மதுரை குயின்மிரா சர்வதேச பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். வல்லபா வித்யாலயா பள்ளி இரண்டாமிடம், டால்பின் எலைட் பள்ளி, ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
ஜிம்னாஸ்டிக் சங்க நிர்வாகி மூவேந்தன் பரிசு வழங்கினார். சங்க நிர்வாகிகள் சவுமியா, சுஜாதா, ஆறுமுக கமலேஷ், கருணாகரன் ஏற்பாடுகளை செய்தனர்.

