/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரங்குகள் நிறைந்த பொருட்கள்; ஆபரில் அள்ளிச்சென்ற மக்கள்; குடும்பத்துடன் வாங்க; குட்டீஸ்களை 'என்ஜாய்' பண்ண வையுங்க
/
அரங்குகள் நிறைந்த பொருட்கள்; ஆபரில் அள்ளிச்சென்ற மக்கள்; குடும்பத்துடன் வாங்க; குட்டீஸ்களை 'என்ஜாய்' பண்ண வையுங்க
அரங்குகள் நிறைந்த பொருட்கள்; ஆபரில் அள்ளிச்சென்ற மக்கள்; குடும்பத்துடன் வாங்க; குட்டீஸ்களை 'என்ஜாய்' பண்ண வையுங்க
அரங்குகள் நிறைந்த பொருட்கள்; ஆபரில் அள்ளிச்சென்ற மக்கள்; குடும்பத்துடன் வாங்க; குட்டீஸ்களை 'என்ஜாய்' பண்ண வையுங்க
ADDED : ஆக 04, 2024 08:55 AM

மதுரை; மதுரை தமுக்கம் மைதானத்தில் துவங்கிய தினமலர், சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024 வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியின் இரண்டாவது நாளான நேற்றும் அலைகடல் போல் குடும்பத்துடன் மக்கள் குவிந்து பொருட்களை அள்ளிச் சென்றனர். இன்றும் நாளையும் மட்டுமே நடக்கும் இந்த ஷாப்பிங்கை கொண்டாட இன்றே கிளம்புங்க மக்களே.
ஆடி பெருக்கில் பொருட்கள் வாங்கினால் ஆண்டுதோறும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் நேற்று கண்காட்சி துவங்கும் முன்பே குடும்பத்துடன் வந்திருந்த மக்கள் திறந்த பின் அரங்குகளுக்குள் நுழைந்தனர். அரங்குகளில் குவித்திருந்த பொருட்களில் இதை வாங்குவதா, அதை வாங்குவதா என உற்சாக மிகுதியில் குஷியாகி பொருட்களை தேர்வு செய்தனர்.
இளம் பெண்கள் ஆர்வம்:
குடும்பத்துடன் வந்திருந்த இளம் பெண்கள் காஸ்மெட்டிக்ஸ், ஆடைகள் விற்பனை அரங்குகளுக்கு முதலில் சென்றனர். அங்கு குவிந்து கிடந்த பேன்ஸி பேக்ஸ், டிசைனர் ஜூவல்லரி உள்ளிட்ட பொருட்களை ஆசை ஆசையாக தேர்வு செய்தனர். அலங்கார மின் விளக்குகள், கலைநயமிக்க சிலைகளை குடும்பத்துடன் வாங்கி சென்றனர். ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட வெளி மாநில அரங்குகளிலும் மக்கள் கூட்டம் களைகட்டியது.
பார்த்து ரசித்து தேர்வு:
சத்யா உள்ளிட்ட மெகா ஸ்டால்களில் ஹோம் தியேட்டர், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் எல்.இ.டி., டிவி, ஸ்மார்ட் போன், டிசைனர் லைட்ஸ் உட்பட மெகா ஷாப்பிங் செய்தனர். மெட்டல் சோபா, ஊஞ்சல், சுவாமி சிலைகள் என பார்த்து ரசித்த மக்கள் அவற்றுடன் செல்பி எடுத்து ஸ்மார்ட் போனில் 'டிபி' வைத்து அசத்தினர்.
சுழலும் செல்பி பாயின்ட்:
ஷாப்பிங்கில் பங்கேற்ற பெண்கள் மறக்காமல் தங்கள் வளைக்கரங்களின் வனப்பை கூட்ட வண்ணமய மெஹந்தியை இலவசமாக வரைந்துகொண்டு மகிழ்ந்தனர். கேம்ஸ் பகுதியில் மிளிரும் வண்ணமிகு மெகா ஹார்ட் பின்னணியில் சுழலும் செல்பி பாயின்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்ற இளம் பெண்கள், குழந்தைகள் ஆர்வமாய் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இசையுடன் ருசிக்கலாம் வாங்க:
நுாற்றுக்கணக்கான அரங்குகளை ஒன்று விடாமல் பார்வையிட்டு தேடி தேடி பொருட்களை வாங்கிய பின் மக்கள் குடும்பத்துடன் புட்கோர்ட் பக்கம் சென்றனர். அங்கு மட்டன், சிக்கன் பிரியாணி, புல்லட் சிக்கன், மட்டன் கோலா, பீட்சா, பர்கர், பொட்டட்டோ பிரை, பனியாரம், கரும்பு ஜூஸ் என போட்டி போட்டு வாங்கி ருசித்தனர். மெகா எல்.இ.டி., திரையில் பாட்டு, இசையை பார்த்து, கேட்டு ரசித்துக்கொண்டே உணவு வகைகளை ருசிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பஜ்ஜி, போண்டா, வடை, புட்டு, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஹோம் மேட் சாக்லேட்ஸ், ஐஸ்கிரீம், குல்பி என ஸ்டால்களில் பலவித உணவுளை வீட்டிற்கு வாங்கி சென்றனர்.
குஷியாய்.... கொண்டாட்டமாய்
குழந்தைகளை குதுாகலிக்க வைக்க போத்தீஸ் கேம் ேஸானில் ஷார்க் கேம், பிக் டிரையின் மினி டிரையின், வாட்டர் ரோலர், எலக்ட்ரானிக் பைக், கார், வாட்டர் போட், ஒட்டக சவாரி, புல்லட் ரைடு என விளையாட்டு வசதிகள் ஏராளம். கலர் கலர் பலுான்கள் குட்டீஸ்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
மெகா பார்க்கிங்
நுாற்றுக்கணக்கான கார்கள், டூவீலர்கள் பார்க்கிங் செய்யும் வகையில் தமுக்கம் மைதானத்தில் மெகா பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை சார்பில் மருத்துவ உதவியும், கண்காட்சி அரங்குகளை கண்காணிக்க ஈ.சி., டெக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் கேமரா வசதியும் செய்துள்ளது.
இணைந்து கரம் சேர்ப்போர்: அசோசியேட் ஸ்பான்சர் ஆனந்தா அண்ட் ஆனந்தா, முத்து மெட்டல், கோ ஸ்பான்சர் லட்சுமி கிரைண்டர், அல்ட்ரா பெர்பெக்ட். ஆடியோ ஸ்பான்சர் இன்போ பஸ்.