/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பச்சிளம் குழந்தை தாயிடம் ஒப்படைப்பு
/
பச்சிளம் குழந்தை தாயிடம் ஒப்படைப்பு
ADDED : மார் 18, 2024 07:07 AM
மதுரை : சென்னையிலிருந்து மதுரை வந்தபாண்டியன் எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை அம்பாத்துரை ரயில்வே ஸ்டேஷன்வந்தபோது, 3 மாத குழந்தையுடன் வாலிபர் ஒருவர் ஏறி உள்ளார். அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்ததை கவனித்த சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், குழந்தையை கடத்தி வருகிறார் என நினைத்து அந்த வாலிபரை தொடர்ந்து கண்காணித்து வந்தார். அந்த குழந்தையுடன் அவர் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினார். அவரைப்பிடித்து மதுரை ரயில்வே போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் திண்டுக்கல் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், காதலித்து திருமணம் செய்தவர்.மனைவியுடன் சண்டை போட்டதால் கோபித்து கொண்டு, குழந்தையுடன் மதுரைக்கு வந்தது தெரியவந்தது. அவரின் மனைவியை அலைபேசிமூலம் தொடர்பு கொண்டு,வரவழைத்து குழந்தையை கொடுத்தனர்.

