ADDED : அக் 28, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் செம்மண் பகுதி என்பதால் வேர்க்கடலை சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது.
இதனால் ஆண்டுதோறும் வேர்க்கடலை சாகுபடி அதிகமாக நடக்கும். இந்தாண்டும் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளனர். சில நாட்களாக மழை பெய்து வருவதால் வேர்க்கடலை செடிகள் நன்கு செழித்து வளர்ந்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.