/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செல்லம்பட்டிக்கு அறுவடை இயந்திரம்
/
செல்லம்பட்டிக்கு அறுவடை இயந்திரம்
ADDED : டிச 11, 2025 05:19 AM
மதுரை: மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் செல்லம்பட்டி வட்டார ஐராவதம் உழவர் உற்பத்தியா ளர் நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நெல்அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இதனை வேளாண் வணிகத்துறை சார்பில் வழங்கினார்.
உழவர், உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் ரஞ்சித், பால்பாண்டி கூறுகையில், ''செல்லம்பட்டி, சேடப்பட்டி ஒன்றிய உழவர்கள் ஆயிரம் பேரை குழுவாக ஒருங்கிணைத்து இந்நிறுவனம் 2003 ல் துவக்கப்பட்டது. செல்லம்பட்டி வட்டாரத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்கிறோம்.
ஒவ்வொரு போகத்திலும் வேலை ஆட்கள் பற்றாக்குறை, இயந்திர பற்றாக்குறை உள்ளதால் அறுவடை காலத்தில் சிரமப்படுகிறோம்.
வேளாண் வணிகத்துறையிடம் கோரிக்கை வைத்ததால் ரூ.30 லட்சம் மானியத்தில் இயந்திரம் வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது'' என்றனர். வேளாண் துணை இயக்குனர் மெர்ஸிஜெயராணி, வேளாண் அலுவலர்கள் சுந்தரபாண்டியன், சித்தார்த் பங்கேற்றனர்.

