sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் ரூ.3.80 கோடி ஹவாலா சிக்கியது

/

மதுரையில் ரூ.3.80 கோடி ஹவாலா சிக்கியது

மதுரையில் ரூ.3.80 கோடி ஹவாலா சிக்கியது

மதுரையில் ரூ.3.80 கோடி ஹவாலா சிக்கியது


ADDED : ஜூலை 25, 2025 02:08 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம், 3.80 கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அடுத்துள்ள தெற்கு ஆவணி மூல வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நகைக்கடைகளும், பட்டறைகளும் அதிகம் உள்ளன.

பெரும்பாலும் மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து மிஷின் கட்டிங்கில் தயாரிக்கப்படும் நகை மாடல்களுக்கு 'டிமாண்ட்' அதிகம் என்பதால், அதற்கென உள்ள புரோக்கர்கள் நேரடியாக, 'பில்' இல்லாமல் விற்று செல்கின்றனர்.

வரி கட்டாமல் இருக்க நகை விற்றதற்கான தொகையை ரொக்கமாக பெறுவது வழக்கம்.

நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே மல்டி லெவல் பார்க்கிங் இடத்தில் இரவு, 7:00 மணிக்கு ஒரு காரில் இருந்து மற் றொரு காருக்கு சில பைகளை வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் மாற்றிக் கொண்டிருந்தனர்.

இதை கவனித்த தனியார் செக்யூரிட்டி ஆகாஷ் பிலிப்ஸ் என்பவர், சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரித்த போது, தெற்கு ஆவணி மூல வீதியில் பாலாஜி கோல்டு டெஸ்டிங் கம்பெனி நடத்தும் பாபுராவ், 38, அவரது ஊழியர் பிரதமேஷ், 25, ஆகியோரும், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விட்டல், 30, அக் ஷய், 30, விஜய், 32, ஆகியோரும் 3.80 கோடி ரூபாயை ஐந்து பைகளில் காரில் வைத்திருந்தது தெரிந்தது.

நகை கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணம் என, தெரிவித்தனர். அதற்கான ஆதாரம் இல்லாததால் நேற்று அதிகாலை, 3:30 மணிவரை அவர்களிடம் போலீசாரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us