தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆபத்து  கட்டடத்தில் அபாய நுாலகம்

 ஆபத்து  கட்டடத்தில் அபாய நுாலகம்

 ஆபத்து  கட்டடத்தில் அபாய நுாலகம்


ADDED : செப் 21, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 01:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: ''மேலக்காலில் ஆபத்தான கட்டடத்தில் செயல்படும் அபாய நுாலகத்தை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும்'' என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

இங்கு அம்பேத்கர் காலனி அருகே பல ஆண்டுகளுக்கு முன் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் அமைக்கப்பட்டது.

நாளடைவில் இது கிராமப்புற நுாலகமாக மாற்றப்பட்டது. தினமும் ஏராளமான பள்ளி, கல்லுாரி போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.

இக்கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. பல இடங்களில் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. துாண்களில் விரிசல்கள் விழுந்துள்ளது. 'பெயின்ட்' உரிந்து கருப்பு நிறமாக மாறியுள்ளது.

ஒன்றிய அதிகாரிகள் இதனை அகற்றி புதிதாக மாற்ற வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us