/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் எச்.டி.எப்.சி., வங்கி பணப்பாதுகாப்பு மையம் திறப்பு
/
மதுரையில் எச்.டி.எப்.சி., வங்கி பணப்பாதுகாப்பு மையம் திறப்பு
மதுரையில் எச்.டி.எப்.சி., வங்கி பணப்பாதுகாப்பு மையம் திறப்பு
மதுரையில் எச்.டி.எப்.சி., வங்கி பணப்பாதுகாப்பு மையம் திறப்பு
ADDED : மே 23, 2025 12:23 AM

மதுரை: -- மதுரை உத்தங்குடியில் எச்.டி.எப்.சி., வங்கியின் 37வது பணப் பாதுகாப்பு மையத்தை (கரன்சி செஸ்ட்) ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் உமா சங்கர் திறந்து வைத்தார்.
எச்.டி.எப்.சி., நிர்வாக இயக்குனர் பவேஷ் சவேரி கூறியதாவது: எங்கள் வங்கியின் முதல் பணப் பாதுகாப்பு மையம் மும்பையில் 2000ல் அமைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 36 மையங்கள் உள்ளன. சென்னை, கோவைக்கு அடுத்து மதுரையில் அமைந்துள்ளது. மதுரை, திருச்சி, திருநெல்வேலி பகுதியில் உள்ள 176 வங்கிகள், 247 ஏ.டி.எம்., மையங்களுக்கு இங்கிருந்து பணம் கொண்டு செல்லப்படும். பிற வங்கிகள், அரசு, பொதுத்துறை, தனியார் நிறுவனங்களுக்கும் தேவையான பணம் இங்கு பெற முடியும். இம்மையம் ரிசர்வ் வங்கியின் கிளை போன்று செயல்படும் என்றார்.
வங்கியின் கட்டமைப்பு குழுத் தலைவர் ஆசிஸ் பார்த்தசாரதி: கரன்சி செஸ்ட் மூலம் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிகள், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்களுக்கு தேவையான பணம் அனுப்பப்படுகிறது. மதுரையில் ஜெர்மன் தொழில்நுட்பத்திலான அதிநவீன லாக்கர் வசதியை கொண்ட மையமாக உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் வங்கியின் தென்மண்டல தலைவர் சஞ்சீவ்குமார், குழுமத் தலைவர் கவுரப் ராய்(செயலாக்கம்), மண்டல தலைவர் ராஜேஷ் சர்மா, மாநில தலைவர் கேசவன் ரங்காச்சாரி, சம்பத்குமார் (சில்லரை விற்பனை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.