ADDED : மே 04, 2026 02:31 AM

மதுரை: மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமை வைத்தார். மாநில தலைவர் அன்பரசன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினரான முதன்மை கல்வி அலுவலர் தயாளன் பேசுகையில், 'ஆசிரியர்கள் பணிஓய்விற்கு பிறகு உடல்நலத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.மகிழ்ச்சியான வாழ்விற்கு ஆரோக்கிய வாழ்க்கைமுறையை பின்பற்றுவதுஅவசியம். நாம் செய்ய வேண்டும் என நினைத்த காரியங்களை ஓய்வில் செய்ய தொடங்கவேண்டும்' என்றார்.
கடந்த கல்வியாண்டில் முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவிஉயர்வு பெற்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
முன்னாள் மாநில தலைவர் சத்தியமூர்த்தி, வாசன் கண் மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி டாக்டர் கமல்பாபு, கண்புரை, குளுக்கோமா அறுவை சிகிச்சை நிபுணர் பிரேம்குமார், தேனி முதன்மை கல்வி அலுவலர் நாகேந்திரன், மதுரை உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன், கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் பாஸ்கரன், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலாஜி, அசோக்குமார்பங்கேற்றனர்.
மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.
