தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான சுகாதார வளாகம்

 பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான சுகாதார வளாகம்

 பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான சுகாதார வளாகம்


ADDED : ஏப் 01, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: மதுரை மேற்கு ஒன்றியம் தேனுார் ஊராட்சி கட்டப்புளி நகர் கருப்புசாமி கோயில் அருகே 2024ல் கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராமல் சேதமடைந்துள்ளது.

ஜெயபாண்டி: மதுரை - -திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள இப்பகுதி மக்களுக்காக ஊராட்சி சார்பில் கழிப்பறை கட்டினர்.

இதனருகே ஊராட்சி சார்பில் கட்டிய குளியல் தொட்டி பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இப்பகுதியினர் மட்டுமின்றி கோயிலுக்கு வரும் பக்தர்கள், சரக்கு லாரி, வேன், டூரீஸ்ட் பஸ் டிரைவர்கள் பயன்படுத்துகின்றனர். கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாடின்றி உள்ளதால் பாதுகாப்பற்ற சூழலில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். சுகாதாரம் பாதிக்கிறது.

பயன்பாட்டிற்கு வராமலேயே கழிப்பறை கதவுகள் சேதமடைந்துள்ளன. மத்திய அரசு நிதி வீணாகி வருகிறது. மறு சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us