ADDED : நவ 17, 2025 02:10 AM
பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் தெத்துார் ஊராட்சி தெருக்களில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இங்கு ஊருக்குள் செல்லும் ரோட்டில் வடிகால் வசதி இன்றி உள்ளதால் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. மந்தை திடல் உட்பட தெருக்களிலும் வார கணக்கில் கழிவுநீர் தேங்கி நிற்கும். அனைத்து தெருக்களிலும் ரூ.பல லட்சம் மதிப்பில் சிமென்ட் ரோடு மற்றும் 'பேவர் பிளாக்' கற்கள் பதித்துள்ளனர்.
ஆனால் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகள் முன் கழிவுநீர் மாத கணக்கில் தேங்குகிறது. பாசிபடர்ந்து தெருக்களில் செல்லும் வாகனங்கள் வழுக்கி விழுகின்றனர்.
இங்குள்ள பழுதடைந்த துணை சுகாதார நிலைய கட்டடம் முன் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி புற்கள் முளைத்துள்ளன. தெருவின் நுழைவுப் பகுதியில் கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால் முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

