/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி.கல்லுப்பட்டியில் சுகாதாரப்பணிகள் பாதிப்பு
/
டி.கல்லுப்பட்டியில் சுகாதாரப்பணிகள் பாதிப்பு
ADDED : ஏப் 26, 2025 03:43 AM
டி.கல்லுப்பட்டி : டி. கல்லுப்பட்டி யூனியனில் உள்ள 42 ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சில ஊராட்சிகளில் சம்பளம் குறைவால் ஆர்வமின்றி பணிபுரிகின்றனர். காலி இடங்கள் நிரப்பப்படாததால் குப்பை, கழிவுகள் அதிகரித்து துாய்மை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்காலிக ஏற்பாடாக சில ஊராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்களை நியமித்து துாய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். சம்பளம் மாதம் ரூ.5000க்கு கீழ் தருவதால் இவர்களும் சரிவர வேலைக்கு வருவதில்லை. இதனால் பல ஊராட்சிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சிகளை சுகாதாரமான முறையில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

