ADDED : நவ 29, 2024 06:00 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் பரம்ஜோதி ஆரோக்கிய சோம வாரம் நடந்தது. சென்னை நேமம் சீடர் யோகநாதன் பேசியதாவது:
மனிதனின் உடல், மனநோய் பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம் உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை, சீரற்ற வாழ்க்கை அமைப்பு முறை, உறவுகளில் அன்பின்மை, மன உளைச்சல், பயம், கர்மவினைகள் மற்றும் இறையருளற்ற நிலை போன்றவை ஆகும். இவற்றிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு பரிபூரண ஆரோக்கியம், மன அமைதி, ஆனந்தம் கிடைப்பதே சோம வாரத்தின் நோக்கம் என்றார். ஏற்பாடுகளை மதுரை பரம்ஜோதி பக்தர்கள் செய்திருந்தனர்.
