ADDED : அக் 30, 2026 06:34 PM

அ நிறம் | அளவு
மதுரை கள்ளழகர் கோயில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட சாதுக்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி 'மதுரை அன்பாலயம் நண்பர்கள்' என்ற பெயரில் இணைந்துள்ள சில இளைஞர்கள், இவர்களுக்கு தீபாவளிக்காக புத்தாடைகள் கொடுத்தனர்.
ஆண்களுக்கு சட்டை, வேட்டி, துண்டும், பெண்களுக்கு சேலை மற்றும் துண்டும் வழங்கினர். மேலும் அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்தனர்.
கொரோனா காலத்தில் இந்த சேவையை தொடங்கிய இளைஞர்கள், தற்போது 7வது ஆண்டாக உதவி செய்து வருகின்றனர் .
